இலங்கை

பேரிடர் இறப்புகள் 200 ஐ தாண்டியது – 218 பேரைக் காணவில்லை

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, அனர்த்தம் காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

273,606 குடும்பங்களைச் சேர்ந்த 998,918 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) மாலை 4 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், பதுளை மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளன,.

இதன்படி, அந்த மாவட்டத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் 66 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 20 இறப்புகளும், குருநாகலில்19 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 105 பேரும், பதுளையைச் சேர்ந்த 53 பேரும், குருநாகலைச் சேர்ந்த 37 பேரும் பேரிடர் காரணமாக காணாமல் போயுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button