இலங்கை

கடல் தொழிலுக்குத் தடை: மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இந்த ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே கடலில் உள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறும் அல்லது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், மீனவர்கள் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால வானிலை அறிவிப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button