இலங்கை

மக்கள் பிரதிநிதி சுட்டுக்கொலை: இதுதான் தேசிய பாதுகாப்பா?

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் இருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு இதுதானா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அலுவலகத்தில் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கி சூடு நடந்தப்பட்டுள்ளது.

தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button