இலங்கை

கடற்றொழிலாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருளை வழங்குமாறு சபையில் வலியுறுத்தல்

பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் கடற்றொழிலாளர்களுக்கு, உரிய முறையில் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், இயந்திர மீன்பிடிப் படகுகளுக்கு 2 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான எரிபொருள் மானியங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்மூலம் இலங்கை கடற்றொழிலை மீட்டெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button