இலங்கை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 74வது ஆண்டு நிறைவு – கொழும்பில் விசேட நிகழ்வு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) திகதி

இதனை முன்னிட்டு இன்று 02திகதி

பிற்பகல் கொழும்பிலுள்ள கட்சி தலைமையத்தில் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 1951 செப்டெம்பர் 2 ஆம் திகதி முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்டது.

கட்சியின் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகளை இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“இந்த முறை நாம் 74வது ஆண்டு நிறைவைக் கட்சித் தலைமையகத்தில் கொண்டாடுகிறோம். அதற்காக, மாவட்ட அமைப்பாளர்களுக்கும், கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

அண்மைய காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் மீண்டும் மறுசீரமைக்கப்படுகின்றன

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இந்த ஆண்டு நிறைவுடன் மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன் மாவட்ட மட்டத்தில் கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button