இலங்கை

கனேடிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தனது பதவிக் காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் எரிக் வொல்ஷின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இதன்போது வாழ்த்துத் தெரிவித்தார்.

கனடாவில் இலங்கை மக்கள் அதிகளவில் வசிப்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கும், இந்நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கச் செயல்முறைக்கும் கனடா வழங்கிய ஆதரவைப் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button