இலங்கை

சித்துப்பாத்தி புதைகுழியில் மேலும் ஒரு சிசுவின் எலும்புக்கூட்டம் மீட்பு

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்துப்பாத்தி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் அடுத்த கட்ட அகழ்வு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், அன்றைய வழக்கு விசாரணையின் போது செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரையில் 147 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதுடன் அவற்றில் 133 என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நேற்றைய தினம் சிசு ஒன்றின் என்புக் கூட்டுத் தொகுதி அகழ்த்தெடுக்கப்பட்டுள்ளது
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button