சுவிஸ்

சுவிஸ் மாகாணங்கள் சிலவற்றிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சில சுவிஸ் மாகாணங்களுக்கு, வெப்பம் தொடர்பில் இந்த வார இறுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாகாணங்களுக்கு எச்சரிக்கை?

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் Vaud மாகாணங்களுக்குத்தான் இந்த வார இறுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண மருத்துவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் வீடற்றவர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மக்களுக்காக அருங்காட்சியகங்கள் மற்றும் நீச்சல் குளங்களுக்கு இலவச அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருப்பவர்கள் வீட்டுக்கே சென்று, அவர்கள் நலம் குறித்து அறிந்துகொள்ள மாகாண அதிகாரிகள் ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள்.

மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறும், நாளொன்றிற்கு ஒன்றரை லிற்றர் தண்ணீராவது குடிக்குமாறும், ஷவர் அல்லது நீச்சல் குளத்தில் குளியல் போட்டு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button