இலங்கை

இது சிங்கள பௌத்தநாடு எங்கும் புத்தர்சிலை வைப்போம்:வீரசேகர கருத்து.

“இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இங்கு எங்கும் புத்தர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை எவரும் தடுக்க முடியாது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விகாராதிபதியிடமும், மறவன்புலவு சச்சிதானந்தத்திடமுமே கேட்க வேண்டும். ஆனால், இலங்கை சிங்கள – பெளத்த நாடு. புத்தர் சிலைகளை எங்கும் வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை யாராலும் தடுக்க முடியாது.” என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button