உலகம்

பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சிக் கூட்டத்தில் மர்மப்பொருள் வெடிப்பு 35பேர் பலி, 200பேர் காயம்.

பாகிஸ்தானில் இஸ்லாமியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜாமியத்-உலெமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F) என்ற கட்சி இந்தப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பு எதனால் நிகழ்ந்தது என்று பாதுகாப்புப் படைகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. அங்கே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button