சுவிஸ்

உணவகத் துறையில் பயிற்சியைப் பாதியில் விடும் இளைஞர்கள் – கிழக்கு சுவிஸில் புதிய திட்டம்

கிழக்கு சுவிஸில் (Ostschweiz) உணவகம், ஹோட்டல் துறையில் தொழிற்பயிற்சியைப் (Lehre) பாதியில் நிறுத்துவதைத் தடுக்க ஒரு புதிய திட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கோடையிலிருந்து இது சோதனை முறையில் நடக்கிறது.

இந்தத் துறையில் பயிற்சி எடுக்கும் 10 பேரில் கிட்டத்தட்ட 4 பேர் பயிற்சியை முடிக்காமல் விலகுகிறார்கள். மற்ற துறைகளில் இது 4 பேரில் ஒருவர் அளவுதான். அதனால் உணவகத் துறையில் இது பெரிய பிரச்சினையாக உள்ளது.

ஒழுங்கற்ற வேலை நேரம், வார இறுதி நாட்களில் வேலை, புதிய வேலைச் சூழலுக்குப் பழகுவதில் சிரமம் – இவை முக்கிய காரணங்கள். இன்றைய இளைஞர்கள் திட்டமிடக்கூடிய வேலை நேரத்தையும், ஓய்வுக்கு நேரத்தையும் விரும்புகிறார்கள்.

இதுவரை பழி இளைஞர்கள் மீதே விழுந்தது. இப்போது துறையினரே தங்கள் பங்கையும் ஏற்றுக்கொள்கிறார்கள். சாப்பேரே அறக்கட்டளை (Stiftung Sapere) தொடங்கிய இந்தப் புதிய அமைப்பு, பயிற்சி பெறும் இளைஞர்களுக்கும் பயிற்சி கொடுக்கும் உணவகங்களுக்கும் சேர்த்து உதவுகிறது. பயிற்சி ஆலோசகர்கள் பயிற்சித் திட்டம் போட உதவுவார்கள். இரு தரப்பிலும் தகராறு வந்தால் பேசித் தீர்த்து வைப்பார்கள். பிரச்சினை பெரிதாகும் முன்பே உதவுவதுதான் நோக்கம்.

இப்பகுதியிலுள்ள உணவகங்கள் இதில் சேரலாம். முதல் ஆண்டு கட்டணம் இல்லை. பிறகு இந்தத் திட்டம் தன் செலவைத் தானே சமாளிக்க வேண்டும். டோகன்பர்க் (Toggenburg) பகுதியில் உள்ள குடும்ப உணவகம் “க்ரோன் மோஸ்நாங்” (Krone Mosnang) ஏற்கெனவே இதில் இணைந்துள்ளது. அங்கு சில ஆண்டுகளாகவே வாரத்துக்கு 4 நாள் மட்டுமே வேலை. இந்த மாதிரி மற்ற பகுதிகளிலும் பின்பற்றப்படும் என்று பொறுப்பாளர்கள் நம்புகிறார்கள்.


மூலம்: SRF
புகைப்படம்: Pylyp Sukhenko / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button