சுவிஸ்

ஐரோப்பாவின் கிறிஸ்துமஸ் தலைநகரம் – சுவிஸ் பேசல்!

சுவிஸ் நகரமான பேசல் (Basel) 2027-ஆம் ஆண்டுக்கான “ஐரோப்பாவின் கிறிஸ்துமஸ் தலைநகரம்” என்ற பட்டத்தை வென்றுள்ளது. சர்வதேச நடுவர் குழு இதை அறிவித்தது. 2026-ல் இந்தப் பட்டம் ஸ்பெயினின் பார்சிலோனாவுக்கு (Barcelona) கிடைத்தது.

பேசலின் கிறிஸ்துமஸ் சந்தை 1978-ல் தொடங்கியது. இன்று பழைய நகரப் பகுதியில் உள்ள இரண்டு பெரிய சதுக்கங்களில், அதாவது பார்ஃபுசர்ப்ளாட்ஸ் (Barfüsserplatz), மூன்ஸ்டர்ப்ளாட்ஸ் (Münsterplatz) ஆகிய இடங்களில், கிட்டத்தட்ட 150 கடைகள் உள்ளன.

சந்தை மட்டுமல்ல. ரைன் ஆற்றில் கிறிஸ்துமஸ் படகு ஓடுகிறது. நகர மண்டபத்தின் முற்றத்தில் வாழ்த்துப் புத்தகம் வைக்கப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட பழைய டிராம் நகரைச் சுற்றி வருகிறது. தியேட்டரின் அட்வெண்ட் காலண்டரும், அருங்காட்சியகக் கண்காட்சிகளும் உண்டு.

சுற்றுச்சூழலுக்கு உதவும் முயற்சிகளையும் நகரம் முன்வைத்தது. மீண்டும் பயன்படுத்தும் கோப்பைகளையும், மின்சாரத்தைக் குறைவாகச் செலவழிக்கும் LED விளக்குகளையும் பயன்படுத்துகிறார்கள். வித்தியாசமான நிகழ்ச்சியும் ஒன்று உண்டு. சாண்டா கிளாஸ் உடையில் பலர் மோட்டார் பைக்கில் தெருக்களில் சுற்றி, தொண்டு நிறுவனங்களுக்காக நன்கொடை திரட்டுகிறார்கள்.

இதே அமைப்பு ருமேனியாவின் பையா மாரே (Baia Mare) நகரை “ஐரோப்பிய கிறிஸ்துமஸ் நகரம்” என்றும், குரோஷியாவின் ஒமிஷ் (Omiš) ஊரை “ஐரோப்பிய கிறிஸ்துமஸ் கிராமம்” என்றும் தேர்ந்தெடுத்துள்ளது.


மூலம்: Le Matin
புகைப்படம்: Ryan Lee / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button