சுவிஸ்

சுவிஸ் ரயில்களில் மின்தடை சோதனை: 3 நிமிடத்தில் மீண்டும் மின்சாரம்

சுவிஸ் ரயில்வே நிறுவனமான SBB, வெள்ளிக்கிழமை அதிகாலை தெசின் மாநிலத்தில் (Ticino) வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்தி சோதனை செய்தது. ரயில்களுக்கான மின்சாரம் மூன்று நிமிடத்தில் மீண்டும் வந்தது.

இது முன்பே திட்டமிட்ட சோதனை. அன்று இரவு தெசினில் எல்லா ரயில்களும் நின்றன. கொத்தார்ட் (Gotthard) சுரங்கத்துக்குள் ஓடிக்கொண்டிருந்த சரக்கு ரயிலும் மெதுவாகி நின்றது. பெர்ன் மாநிலத்தில் உள்ள சோலிகோஃபென் (Zollikofen) கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதிகாலை 2.20 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது.

புதிதாக உருவாக்கிய தானியங்கி அமைப்பு உடனே வேலை செய்தது. மூன்று நிமிடத்தில் மின்சாரம் திரும்பியது. பிறகு பொல்லேஜியோ (Pollegio) கட்டுப்பாட்டு மையம் அனுமதி கொடுத்தது. ஓட்டுநர்கள் ரயிலை மீண்டும் ஓட்டினார்கள்.

2005 ஜூன் மாதம் சுவிஸ் முழுவதும் ரயில் மின்சாரம் நின்றுபோனது. அப்போது சுமார் 2000 ரயில்கள் நின்றன. 2 இலட்சம் பயணிகள் மாட்டிக்கொண்டார்கள். மின்சாரம் வர மூன்றரை மணி நேரம் ஆனது.

அதற்குப் பிறகு SBB நிறைய முதலீடு செய்தது. ஆனாலும் மின்தடையை முழுமையாகத் தடுக்க முடியாது. அதனால் புதிய அமைப்பு. பெரிய மின்தடை வந்தாலும் 5 நிமிடத்துக்குள் சரிசெய்வதே இலக்கு. இதனால் ரயில் தாமதமும் ரத்தும் குறையும்.


மூலம்: SRF
புகைப்படம்: Alessandro Prato / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button