சுவிஸ்

மாஃபியா கும்பலுக்கு வேலை செய்த சுவிஸ் தோட்டக்காரருக்கு 6 ஆண்டு சிறை

இத்தாலிய மாஃபியா கும்பலான ‘ந்த்ராங்கேத்தாவுக்கு (’Ndrangheta) வேலை செய்த 59 வயது நபருக்கு, செவ்வாய்க்கிழமை பெலின்சோனாவில் (Bellinzona) நீதிமன்றம் தண்டனை விதித்தது. அவருக்கு 6 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைத்தது.

இவர் ஆர்காவ் மாநிலத்தில் (Aargau) தோட்ட வேலை செய்பவர். ‘ந்த்ராங்கேத்தா என்பது இத்தாலியின் தெற்கில் உள்ள கலாப்ரியா பகுதியில் இருந்து வந்த மாஃபியா கும்பல். இந்தக் கும்பலில் இவர் உறுப்பினர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று நீதிபதி கூறினார்.

சுவிஸ் மத்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் 6 ஆண்டு 3 மாதம் சிறை கேட்டிருந்தது. நீதிமன்றம் அதே தண்டனையை விதித்தது. அதோடு 10 ஆண்டுகள் இவரை சுவிஸில் இருந்து வெளியேற்றவும் உத்தரவிட்டது.

குற்றச்சாட்டின்படி, இவர் போதைப்பொருள், ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டார். கடன் வசூலிக்கவும், பாதுகாப்புப் பணம் பறிக்கவும் மாஃபியாவின் பெயரைச் சொல்லி மக்களை மிரட்டினார். 2001 முதல் 2020 வரை சுவிஸில் இந்தக் கும்பலுக்காக வேலை செய்தார் என்றும் கூறப்படுகிறது.

அனெல்லோ-ஃப்ருசி (Anello-Fruci) என்ற குடும்பக் கும்பலின் சுவிஸ் பிரதிநிதியாகவும், பொருட்களை அனுப்பும் பொறுப்பாளராகவும் இவர் இருந்தார். ‘ந்த்ராங்கேத்தாவில் மிகவும் சக்திவாய்ந்த குடும்பங்களில் இதுவும் ஒன்று.


மூலம்: SRF
புகைப்படம்: Sasun Bughdaryan / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button