சுவிஸ்

குப்பையில் காதெமாரியோவுக்குத் தங்கம், மோர்கோத்தேக்குக் “கறுப்பு” விருது

தெசின் மாநிலத்தில் (Ticino) உள்ள மோர்கோத்தே (Morcote) ஊர், 2025-ல் குப்பை அதிகமானதற்காக “கறுப்பு ஓக்கியோ” (OKKIO) விருது பெற்றுள்ளது. காதெமாரியோ (Cademario) ஊர் குப்பையைக் குறைத்ததற்காகத் தங்க விருது வாங்கியுள்ளது.

குப்பை மேலாண்மையைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளைக் கொடுக்கிறது. மாநில அரசு வெளியிடும் குப்பைக் கணக்குகளை வைத்து முடிவு செய்கிறார்கள். சிறப்பாகச் செய்த ஊர்களுக்குப் பாராட்டு, மோசமான ஊர்களுக்குக் “கறுப்பு” விருது.

மோர்கோத்தேயில் ஒருவருக்கு ஆண்டுக்கு சுமார் 70 கிலோ குப்பை கூடியுள்ளது. ஊர் நிர்வாகம் மூன்று காரணங்கள் சொல்கிறது. விடுமுறை வீடுகள் அதிகம். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள். முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் பலர் அந்த ஊரில் பதிவு செய்யப்படவில்லை.

காதெமாரியோவில் நிலைமை நேர்மாறு. அங்கு ஒருவருக்கு சுமார் 75 கிலோ குப்பை குறைந்துள்ளது. இதுதான் மிகப் பெரிய குறைவு. அதனால் அவர்களுக்குத் தங்க விருது கிடைத்தது.

“பச்சை ஓக்கியோ” விருது மகாதினோ சமவெளிப் பூங்கா அமைப்புக்குக் (Piano di Magadino) கிடைத்துள்ளது. அங்குள்ள 26 பண்ணைகள் தங்கள் பொருட்களை நேரடியாக விற்கும்போது, மண்ணில் மக்கும் பைகளைப் பயன்படுத்தத் தொடங்கின. அதற்காகத்தான் இந்தப் பாராட்டு.


மூலம்: RSI
புகைப்படம்: Compagnons / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button