சுவிஸ் வலே மாநிலத்தில் (Valais) உள்ள அரோலா-ஃபெர்பெக்ள் (Arolla-Ferpècle) ஓநாய் கூட்டம் முழுவதையும் சுட்டுக் கொல்ல அனுமதி கிடைத்துள்ளது. சுவிஸ் சுற்றுச்சூழல் அலுவலகம் (OFEV) இந்த அனுமதியைக் கொடுத்துள்ளது.
மாநில அரசு செவ்வாய்க்கிழமை இதை அறிவித்தது. நவம்பர் 10 முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துவிட்டது. 2027 ஜனவரி 31 வரை ஓநாய்களைச் சுடலாம்.
வலே மாநிலத்துக்கு இது முதல் அனுமதி இல்லை. ஒக்ஸ்ட்போர்ட் (Augstbord), நான்ஸ் (Nanz) ஆகிய இரண்டு கூட்டங்களையும் முழுவதுமாக அழிக்க ஏற்கனவே அனுமதி கிடைத்திருந்தது.
நெண்டாஸ்-இசெராபிள் (Nendaz-Isérables), துல் (Les Toules), ஆன்விய்யே-ரெஷி (Anniviers-Réchy) கூட்டங்களுக்கு வரையறுக்கப்பட்ட அனுமதி மட்டுமே உண்டு. அதாவது அந்தக் கூட்டங்களில் சில ஓநாய்களை மட்டும் சுடலாம்.
ஆடு, மாடு போன்ற வளர்ப்பு விலங்குகளை ஓநாய்கள் தாக்கும் இடங்களில் பிரச்சினையைக் குறைப்பதே இதன் நோக்கம் என்று மாநில அரசு கூறுகிறது.
மூலம்: Le Matin
புகைப்படம்: Xavier von Erlach / Unsplash





