ஜோதிடம்

இன்றைய (10.11.2026) ராசிபலன்

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தடைகள் வரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். வியாபார போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்த்துவிடவும்.

மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம்.வியாபாரத்தில் டென்ஷன் விலகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

கடகம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். குலதெய்வம் கோயிலுக்குச் செல்வீர். வியாபாரத்தில் வெற்றி காண்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

சிம்மம்: நீங்கள் ஒன்று பேச, அதை மற்றவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்வார்கள். அனைவரிடமும் மிக எச்சரிக்கையாக பேசுவது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கன்னி: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.

துலாம்: திட்டமிட்ட பணிகளை பல தடைகளை தாண்டி முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

விருச்சிகம்: தட்டு தடுமாறி சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மகரம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.

கும்பம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.

மீனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

Source : Hindu Tamil

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button