சூரிச் (Zürich) நகரில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான மத்திய அரசு மையத்தில் தீ பிடித்துள்ளது. Pfingstweidstrasse பகுதியில் உள்ள அந்தக் கட்டடத்தின் ஜன்னலிலிருந்து பெரிய தீ ஜுவாலைகள் வெளியே வந்தன.
மாலை 5 மணியளவில் சூரிச் நகரப் போலீசுக்கு அவசர அழைப்பு வந்தது. உடனே தீயணைப்புப் படையினர் அங்கு சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ எவ்வளவு பெரியது என்பதையும், எப்படிப் பிடித்தது என்பதையும் போலீசார் இன்னும் சொல்லவில்லை. யாராவது காயமடைந்தார்களா என்ற தகவலும் இப்போது இல்லை.
ஆபத்து எச்சரிக்கைகளை அனுப்பும் சுவிஸ் அரசின் செயலி Alertswiss, புகை பற்றி இதுவரை எந்த எச்சரிக்கையும் வெளியிடவில்லை.
மூலம்: SRF
புகைப்படம்: John Torcasio / Unsplash





