பிரிபூர் மாநிலத்தில் (Fribourg) மாநில நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்துள்ளது. வலதுசாரி, நடுநிலைக் கட்சிகள் தொடர்ந்து பெரும்பான்மையைத் தக்கவைத்துள்ளன.
மித்தே (Mitte), SVP, FDP ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பிடித்துள்ளன. ஆனால் இந்த மூன்றுக்குள் இடங்கள் மாறியுள்ளன. தாராளவாதக் கட்சியான FDP 5 இடங்களை இழந்தது. வலதுசாரிக் கட்சியான SVP குறைந்தது 6 இடங்களைப் பெற்று, இரண்டாவது பெரிய கட்சியாகியுள்ளது. மித்தே கட்சி மிகச் சிறிய வித்தியாசத்தில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதன் இடங்கள் மாறவில்லை.
இடதுசாரி பக்கமும் மாற்றம் உண்டு. சோசலிச ஜனநாயகக் கட்சி (SP) ஐந்து ஆண்டுகளுக்கு முன் இழந்த இடங்களில் சிலவற்றை மீட்டுள்ளது. பசுமைக் கட்சி இடங்களை இழந்துள்ளது. “Das-Was” என்ற புதிய இடதுசாரிக் குழுவும் முதல்முறையாக மாநில நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளது.
மாநில அரசுக்கான (Staatsrat) தேர்தலும் நடந்தது. FDP கட்சியின் ரோமான் கோலோ (Romain Collaud), தீதியே காஸ்டெல்லா (Didier Castella) இருவரும் முதல் சுற்றிலேயே மீண்டும் தேர்வானார்கள். மித்தே கட்சியின் மரி-பிரான்ஸ் ரோத் பாஸ்கியே (Marie-France Roth Pasquier) புதிதாகத் தேர்வானார்.
தற்போதைய அமைச்சர்களான SVP கட்சியின் பிலிப் தெமியேர் (Philippe Demierre), பசுமைக் கட்சியின் சில்வி போன்வன்-சான்சோனார் (Sylvie Bonvin-Sansonnens) இருவருக்கும் தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை. தேர்வாகாதவர்களில் மித்தே கட்சியின் மார்க்குஸ் யூல்மி (Markus Julmy) அதிக வாக்குகள் பெற்றார். அவர் 1261 வாக்குகள் வித்தியாசத்தில் தவறவிட்டார்.
மூலம்: SRF
புகைப்படம்: Chris Lutke / Unsplash





