சுவிஸ்

700 ஆண்டு பழமையான சுவிஸ் விடுதியில் அரிய கண்டுபிடிப்பு: ஹோட்டலாக மாறுகிறது

ஷ்விட்ஸ் மாநிலத்தில் (Schwyz) உள்ள ஸ்டைனன் (Steinen) ஊரில் “அடலர்” (Adler) என்ற பழைய விடுதிக் கட்டிடம் இருக்கிறது. அதை மீண்டும் ஹோட்டலாகத் திறக்க உரிமையாளர் திட்டமிட்டுள்ளார்.

இந்தக் கட்டிடம் இப்போது காலியாக இருக்கிறது. வெளியே இருந்து பார்த்தால் சாதாரண வீடு போலத்தான் தெரியும். ஆனால் உள்ளே ஒரு அரிய பொருள் கிடைத்துள்ளது. கட்டிடம் கட்டிய காலத்து அடுப்பு. அது 1322-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. கல் சுவரும் சாம்பலும் அப்படியே இருந்தன.

பழைய கட்டிடங்களை ஆராயும் நிபுணர் உல்ரிகே கொல்னிக் (Ulrike Gollnick) இதைக் கண்டுபிடித்தார். அவர் பல நூறு வீடுகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இப்படி ஒரு அடுப்பை இதுவரை பார்த்ததில்லை. வருடங்கள் செல்லச் செல்ல வீடுகளில் அடுப்புப் பகுதிதான் அதிகம் மாற்றப்படும்.

கட்டிடத்தின் உரிமையாளர் பேட் ஆஃப் டெர் மௌர் (Beat Auf der Maur). அவர் மரவீடுகள் கட்டும் நிறுவனம் நடத்துகிறார். அவர் தச்சுத் தொழிலும் கற்றவர். 700 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு நேர்த்தியாகக் கட்டியிருப்பது அவரை வியக்க வைக்கிறது. இந்த பழைய வீடுகளின் தரத்தை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்பது அவர் ஆசை.

ஆனால் செலவு பெரியது. கட்டிடம் இடிந்துவிடாமல் காக்கவே 1.2 மில்லியன் ஃப்ரங்க் செலவாகிவிட்டது. ஹோட்டலாக மாற்ற இன்னும் 3 முதல் 4 மில்லியன் ஃப்ரங்க் தேவை. தனியாகச் சமாளிக்க முடியாது என்பதால் அவர் அறக்கட்டளைகளிடம் உதவி கேட்கப் போகிறார். இது பாதுகாக்கப்பட்ட கட்டிடம் என்பதால் மாநில அரசும் மத்திய அரசும் கொஞ்சம் பணம் தர வாய்ப்பு உள்ளது.


மூலம்: SRF
புகைப்படம்: Adrian Botica / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button