ஆர்காவ் மாநிலத்தில் (Aargau) உள்ள லென்ஸ்பர்க் (Lenzburg) நகரின் ஸ்டாப்ஃபர்ஹவுஸ் (Stapferhaus) அருங்காட்சியகத்தில் “பாதுகாப்பு. ஒரு ஆபத்தா?” என்ற புதிய கண்காட்சி நடக்கிறது. பாதுகாப்புக்கும் ஆபத்துக்கும் உள்ள தொடர்பை நேரில் அனுபவிக்கலாம்.
இங்கே வருபவர்கள் ஒவ்வொருவரும் சோதனைக்கு உட்படுபவர்கள் போலத்தான். தங்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு தேவை, எவ்வளவு ஆபத்தை எடுக்கத் தயார் என்று பல இடங்களில் சோதித்துப் பார்க்கலாம். தெரியாத இடத்துக்குள் குதிப்பது, கேசினோ விளையாட்டு, பாதுகாப்பு ஆய்வகம் என்று பல பகுதிகள் உள்ளன. நகைச்சுவையும் எதிர்பாராத காட்சிகளும் நிறைய இருக்கின்றன.
சமூகவியலாளரும் குற்றவியல் நிபுணருமான பேராசிரியர் டிர்க் பையர் (Dirk Baier) இதைப் பற்றிப் பேசினார். பாதுகாப்பு உணர்வு ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்கிறார். பழகிய இடங்களில் நாம் பாதுகாப்பாக உணர்வோம். இருட்டான இடம், ஒழுங்கில்லாத இடம், எதுவும் தெளிவாகத் தெரியாத இடங்களில் பயம் அதிகமாகும்.
சூரிச் ETH பல்கலைக்கழகம் 1990-களில் இருந்து இதை ஆய்வு செய்கிறது. அப்போது 10 பேரில் 3 பேர் தங்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தனர். சமீபத்தில் அது 10 பேரில் ஒருவருக்கும் குறைவு. ஆனால் சமீப ஆண்டுகளில் இந்தப் பயம் மீண்டும் கூடுகிறது. உலகில் நெருக்கடிகள் அதிகரித்ததும், செய்திகளில் பிரச்சினைகளே அதிகம் வருவதும் காரணமாக இருக்கலாம் என்கிறார் பையர். பொது இடங்களில் நல்ல வெளிச்சம் உதவும் என்றும், செய்திகளை அளவாகப் பார்ப்பது நல்லது என்றும் அவர் சொல்கிறார்.
எவ்வளவு பாதுகாப்பு போதும், எந்த ஆபத்தை ஏற்கலாம் என்பதற்கு எளிய பதில் இல்லை என்று கண்காட்சி காட்டுகிறது. அதை ஒவ்வொருவரும், ஒவ்வொரு சமூகமும் தானே தீர்மானிக்க வேண்டும்.
மூலம்: SRF
புகைப்படம்: Artur Matosyan / Unsplash





