சுவிஸின் உரி மாநிலத்தில் (Uri) உள்ள ஸ்பிரிங்கன் (Spiringen) கிராமத்தில் முதல் முறையாக செயற்கைப் பனி மைதானம் திறக்கப்படுகிறது. நவம்பர் மத்தியில் திறப்பு விழா நடக்கும்.
உரி மாநில ஐஸ் ஹாக்கி கிளப் (EHC Uri) தொடங்கி 13 வருடம் ஆகிறது. ஆனால் இத்தனை வருடமும் அவர்களுக்குச் சொந்த மைதானம் இல்லை. பயிற்சிக்கும் போட்டிக்கும் பக்கத்து மாநிலங்களுக்குப் போக வேண்டியிருந்தது. நீண்ட பயணம், வசதியில்லாத நேரங்கள். சுவிஸிலேயே சொந்த ஐஸ் மைதானம் இல்லாத ஒரே மாநிலம் உரி ஆகத்தான் இருக்கும் என்று கிளப் தலைவர் மார்க்கஸ் அர்னோல்ட் (Markus Arnold) சொல்கிறார்.
இனி கிளப் சொந்த ஊரிலேயே வாரத்துக்கு இரண்டு முறை பயிற்சி எடுக்கும். போட்டிகளும் இங்கேயே நடக்கும். முக்கியமாக, சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுக்க முடியும். இதுவரை அது முடியவில்லை. சுமார் 50 குழந்தைகள் சேரத் தயாராக இருக்கிறார்கள். முதல் சோதனைப் பயிற்சி இலவசம். உபகரணங்களை கிளப் 10 பிராங்குக்குக் கொடுக்கும்.
இந்த மைதானம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை திறந்திருக்கும். கிளப் பயிற்சி இல்லாத நேரத்தில் பொதுமக்களும் ஐஸ் ஸ்கேட்டிங் செய்யலாம். பிப்ரவரி கடைசியில் பனித் தளத்தைக் கழற்றி, புல் விதைப்பார்கள். பிறகு அதே இடத்தில் கால்பந்து, வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.
மூலம்: SRF
புகைப்படம்: Markus Spiske / Unsplash





