சுவிஸ்

போலீஸ் வேடத்தில் முதியவர்களை ஏமாற்ற முயன்ற இருவருக்கு சிறை

சுவிஸின் வோ மாநிலத்தில் (Vaud) போலீஸ் போல நடித்து முதியவர்களை ஏமாற்ற முயன்ற இருவர் கையும் களவுமாகப் பிடிபட்டனர். இப்போது அவர்களுக்குச் சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.

ஒருவருக்கு 120 நாள், மற்றவருக்கு 60 நாள் சிறை. இருவரும் உண்மையான போலீசாரிடமே சிக்கினார்கள். இந்தச் செய்தியை “24 heures” என்ற சுவிஸ் பிரெஞ்சு மொழி நாளிதழ் வெளியிட்டது. வோ மாநிலத்தில் போலி போலீஸ், போலி வங்கி அதிகாரி மோசடிகள் பல மாதங்களாகத் தொடர்கின்றன.

முதல் சம்பவம் 2025 டிசம்பரில் பெக்ஸ் (Bex) நகரில் நடந்தது. அந்த ஆள் ஒரு மூதாட்டிக்கு போன் செய்தார். “திருட்டைத் தடுக்கும் பிரச்சாரத்துக்காக போலீஸ் உங்கள் வீட்டுக்கு வரும்” என்றார். பிறகு வீட்டுக்கே போய், விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னார். மூதாட்டியின் நண்பர் அப்படி ஒரு பிரச்சாரமே இல்லை என்று கண்டுபிடித்து போலீசுக்குச் சொன்னார். போலீஸ் வந்தபோது அந்த ஆள் ஹாலில் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார். அவர் ஏற்கெனவே பல குற்றங்களில் சிக்கியவர்.

இரண்டாவது சம்பவம் ஏப்ரலில் கூய் (Cully) ஊரில் நடந்தது. அதிகாலை 1 மணிக்கு ரோந்து போலீசார் ஒரு வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்தார்கள். பைஜாமாவில் இருந்த முதிய தம்பதி கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருந்தனர். பக்கத்தில் சீருடையில் ஒரு இளைஞன் கையில் ஸ்மார்ட்போனுடன் நின்றான். போலீசாருக்குச் சந்தேகம் வந்தது. உள்ளே போய் அவனைக் கைது செய்தார்கள். வங்கியில் பணம் மோசடியாக எடுக்கப்பட்டதாகச் சொல்லி வாக்குமூலம் வாங்க வந்ததாக அவன் நடித்திருந்தான்.


மூலம்: Le Matin
புகைப்படம்: Scott Rodgerson / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button