பெர்ன் மாநிலத்தில் (Bern) உள்ள கோனிட்ஸ் (Köniz) நகரில் ஒரு இறைச்சிக் கடையின் குளிர்பதன அமைப்பை ஹேக்கர்கள் மாற்றியுள்ளனர். சுவிஸ்ஸில் இப்படிப்பட்ட தாக்குதல் வெளியே தெரியவந்தது இதுவே முதல் முறை.
கடை உரிமையாளர் சொன்னதன்படி, ஃப்ரீசருக்குள் 50 முதல் 70 டிகிரி வெப்பம் இருந்தது. இறைச்சி வெந்தது போல ஆகிவிட்டது. விலைச் சீட்டுகள் உருகிப் போயின. முகக்கவசம் போடாமல் அந்த அறைக்குள் போகவே முடியவில்லை. பாதுகாப்புக்காக அந்தக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சுவிஸ்ஸில் பல இடங்களில் கடைகள் வைத்திருக்கும் வோல்க் (Volg) நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் 3 கடைகளில் குளிர்பதன அலமாரிகளின் அமைப்புகளை யாரோ மாற்றியிருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் வலுப்படுத்தியுள்ளதாக வோல்க் கூறுகிறது.
கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பிரான்ஸில் அதிகம். இரத்தம் சேமிக்கும் குளிர்பதன அமைப்புகளிலும் கை வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்தது.
ஆனால் சுவிஸ்ஸில் இரத்த தான சேவைகள் மீது இதுவரை எந்தத் தாக்குதலும் தெரியவில்லை என்று சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்த தான சேவை (Blutspende SRK Schweiz) கூறியுள்ளது. இணையத் தாக்குதல் ஆபத்துகளை எப்போதும் கண்காணித்து, பாதுகாப்பை மாற்றிக்கொண்டே இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
மூலம்: SRF
புகைப்படம்: Franki Chamaki / Unsplash





