உலகம்

ஸ்பெயின் பாரிய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

மத்திய ஸ்பெயினில் இன்றைய தினம் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றின் பின்பகுதியில் அதிவேக ரயில் ஒன்று மோதியதில் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கஸ்திலா லா மஞ்சா (Castilla La Mancha) பகுதி தொடர்பான மத்திய அரசின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் எஞ்சியிருப்பவர்கள் மற்றும் உடல்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், குறைந்தபட்சம் 80 பேர் காயமடைந்துள்ளதாக கஸ்திலா லா மஞ்சா பிராந்தியத் தலைவர் எமிலியோ கார்சியா-பேஜ் (Emiliano García-Page) தெரிவித்துள்ளார்.

 

ஸ்பெயினில் இந்த ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய ரயில் விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button