உலகம்

38 பேரைக் கொன்ற தின்ற கொடூரன் உகாண்டாவில் கைது!

கடந்த 15 ஆண்டுகளில் 38 பேரைக் கொன்று, அவர்களின் உடல்களைத் தின்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஜிரிசி மோசஸ் என்ற நபரை உகாண்டா நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

2010 முதல் 2025ஆம் ஆண்டு வரை மசாகா, இபாண்டா, காசோ உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொலைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 2021ஆம் ஆண்டு ராகை மாவட்டத்தின் கனபுலிமு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து, பெந்தெகொஸ்தே சபைப் போதகர் ஸ்டீபன் முகாம்பே, அவரது மனைவி உள்ளிட்ட ஒன்பது பேரைக் கொலை செய்த சம்பவம் உகாண்டாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கொலைகளுடன் முஜிரிசி மோசஸுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. நீண்டகாலமாகத் தலைமறைவாக இருந்த அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக உகாண்டா பாதுகாப்புப் படையின் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button