இலங்கை

இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் மீள கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில் இந்திய பாதுகாப்புப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டார்.

அங்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த சிறைத்தண்டனை நிறைவடைந்த நிலையில், அவரை இலங்கைக்கு நாடுகடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதற்கமைய, நேற்று (26) இரவு வேளையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார்.

இதன்போது, அங்கு தயார் நிலையில் இருந்த பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பாக உளவுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button