அரசியல்இலங்கை

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு இன்று (07) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைக்கு அமைவாகவே இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் கீழ் இன்றைய தினத்திலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button