
காந்தியடிகளின் அகிம்சை வழியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு இன்னுயிர் ஈந்த தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளையொட்டி, இலங்கையின் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.
இலங்கை அரசின் இந்தத் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விருத்தாசலம் நகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
விருத்தாசலம், புவனகிரி மற்றும் திட்டக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் சார்பாக நடைபெற்ற இப்போராட்டத்திற்கு விருத்தாசலம் மாவட்டச் செயலாளர் திரு. தியாக. இளையராஜா தலைமை தாங்கி ஒருங்கிணைப்பு செய்தார். இதில் புவனகிரி மாவட்டச் செயலாளர் திரு. வ.க. முருகன் மற்றும் திட்டக்குடி மாவட்டச் செயலாளர் திரு. ரெங்க சுரேந்தர் ஆகியோர் முன்னிலை வகித்து பங்கேற்றனர்.
மேலும், இந்நிகழ்வில் தலைமை நிலையச் செயலாளர் திரு. உ. கண்ணன், கடலூர் மண்டலப் பொறுப்பாளர் திரு. தி. கண்ணன், மாநில அமைப்புக் குழு உறுப்பினர் திரு. சேரலாதன், மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் திரு. ஜோதி. குமரவேல், மாநில அமைப்புத் துணைச் செயலாளர் திரு. பி.ஜி. சேகர் மற்றும் மாநிலக் கொள்கை விளக்க அணித் தலைவர் திரு. மாரிமுத்து உள்ளிட்ட மாநில, மண்டல மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு இலங்கை அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தியாக தீபம் திலீபனின் நினைவைப் போற்றும் வகையிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்து நடத்திய அனைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறவுகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.






