தமிழீழம்

திலீபனின் 39ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் இரத்ததான முகாம்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (24) உணர்வுபூர்வமான இரத்ததான முகாமொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

மண்ணின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவை அர்த்தமுள்ள வகையில் நினைவுகூரும் நோக்கில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தன்னார்வ அடிப்படையில் இடம்பெற்ற இரத்ததானம், உயிர்களைக் காப்பதற்கான மனிதநேயப் பணியாகவும், திலீபனின் நினைவை சமூகப் பொறுப்புணர்வுடன் முன்னெடுக்கும் செயற்பாடாகவும் அமைந்தது.

நிகழ்வில் பங்கேற்றவர்கள் திலீபனின் தியாகத்தையும் அவரது ஐந்து அம்சக் கோரிக்கைகளையும் நினைவுகூர்ந்ததுடன், சமூக நலனுக்காக தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button