
இலங்கையில் தற்போது இல்லாத முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில், அவருக்கு எதிராக இன்டர்போல் ‘Blue Notice’ வெளியிடுமாறு இலங்கை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
, இலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள இன்டர்போல், மேலதிக தகவல்களை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான ஆவணங்களை இலங்கை அதிகாரிகள் தற்போது தயாரித்து வருகின்றனர்.
பசில் ராஜபக்சவுக்கு எதிராக தற்போது இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முதலாவது, மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை, சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பானது.
இரண்டாவது, ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின்போது 12,000 டி-ஷர்ட்டுகளை விநியோகித்ததுதொடர்பானது. இதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் ரூ.7.8 மில்லியன் நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.





