தமிழீழம்

தனிமையிலிருந்த மூதாட்டி அடித்து கொடூர கொலை – யாழ்.புத்தூரில் சம்பவம்

யாழ்ப்பாணம், புத்தூர் மேற்கு – சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் மூதாட்டி ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது.

குறித்த மூதாட்டி புத்தூர் மேற்கு, சிவன் கோவில் அருகே அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து, அயல் வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் குறித்த வீட்டிற்குச் சென்று பார்வையிட்டபோது, மூதாட்டி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் குறித்த கொலைதொடர்பாக சந்தேகத்தின் பேரில் பேரன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button