இலங்கை

22வது திருத்தத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல்!

இலங்கையில் ஆளும்கட்சியால் கொண்டுவரப்பட்ட 22ஆவது வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

 

அதற்கமைய, இன்று (01) காலை 10.00 மணி முதல் உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.

 

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

 

அதன்படி, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் நீதிபதிகள் அமர்வு நேற்று அறிவிக்கப்பட்டதுடன், அதில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button