
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இலங்கை சட்டமா அதிபர் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய மூவர்:
- கதிர்காத்தம்பி ஜெயகிஷன் (ஜெயந்தன்)
- நிமல் தேவ்சுகன் (ஜெயகந்தன்)
- நடராசா நாகுலேந்திரன் (சிம்பு அல்லது நாகுலன்)
பேராசிரியர் ரவீந்திரநாத் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர்.
2006 டிசம்பர் 16 முதல் 18ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக வழக்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.





