
யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியிலிருந்து இரட்டைக் குழந்தைகள் போன்ற ஒரே அளவை உடைய வேறு குழந்தைகளின் என்புக்கூடுகள் இன்று மீண்டும் மீட்கப்பட்டுள்ளன.
இன்று 3ஆம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது்அடையாளம் இரு குழந்தைகளின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. 10 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் இதுவரையிலான 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 552 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 540 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.





