
திருகோணமலை -திரியாய் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -திரியாய் வரத விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று (10) இடம்பெற்றது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவுநாள் நிகழ்வில் , உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி தீபச்சுடர் ஏற்றி ,மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
1985.08.10 அன்று இடம்பெற்ற இப்படுகொலைச் சம்பவத்தில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





