உலகம்

சீனாவை புரட்டி எடுத்த ‘டொல்பின்’ சூறாவளி ; இலட்சக்கணக்கானோர் வெளியேற்றம்

சீனாவில் மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ‘டொல்பின்’ சூறாவளி, சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.

1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிழக்கு சீனாவைப் பாதித்த மிகப்பெரிய சூறாவளி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் சராசரியாக 12 நாட்கள் நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் 250 – 500 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சிறிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

கிழக்கு சீனா முழுவதும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பல துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்களின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், டொல்பின் சூறாவளியின் தாக்கம் பிலிப்பைன்ஸிலும் ஏற்பட்டுள்ளது.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த நாட்டில் 380,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button