இலங்கைதமிழீழம்தமிழ்

எட்டாவது வாரமாக தொடரும் பலாலி நில மீட்புப் போராட்டம்

வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி உரிமையாளர்கள் பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விரைவில் விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button