தமிழீழம்தமிழ்

“சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” மாநாடும் ; ‘வரலாற்றின் வேர்கள்’ கௌரவிப்பு நிகழ்வும்

“சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” எனும் தலைப்பிலான மாநாட்டு மற்றும்  வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பு நிகழ்வும் போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது
தமிழ்தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில் 2009, மே, 18, க்கு முன்னர் தமிழ்தேசியப்பணிகளை தடம்மாறாமல், கொள்கை தவறாமல், திசைமாறாமல், ஆற்றியதற்காக தமிழ் ஆயுத கும்பல்களால் படுகொலைசெய்யப்பட்ட பற்றாளர்களுக்கும், அந்த காலங்களில் பல்வேறுபட்ட பணிகளைசெய்தவர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், போராளிக்கலைஞர்கள் என 25, தேசப்பற்றாளர்களுக்கான “வரலாற்று வேர்கள்” என்ற மகுடம் சூட்டி பாராட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு நகரபிதா சிவம் பாக்கியன்,இலங்கை தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் யாழ்மாவட்டம், கவிந்திரன் கோடீஷ்வரன் அம்பாறைமாவட்டம், ஞானமுத்து ஶ்ரீநேசன் மட்டக்களப்பு மாவட்டம், வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத், மேனாள் பா.உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஷ்வரன்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.சுரேஷ்,மேனாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா, மட்டக்களப்பு மேற்கு பிரதேச சபை தவிசாளர் த. கோபாலபிள்ளை,
ஆன்மீகத்தலைவர்களான கொக்கட்டிச்சோலை ஶ்ரீதான்தோன்றீஷ்வரர ஆலய பிரதம குரு சிவசிறி சச்சிதானந்தக்குருக்கள், சிவஶ்ரீ வேலன்சுவாமி, மூத்த அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், அருட்தந்தை லூத் அடிகளார்,மேனாள் போராளிகள், தமிழ்தேசிய பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள் என நூறுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மாநாட்டு நிகழ்வில் முக்கியமாக தியாச்சுடர் அன்னைபூபதி அரங்கம் என நிகழ்வு மேடையில் குறிப்பிட்டு தமிழ்தேச விடுதலைக்காக உழைத்து தமிழ் ஆயுதக்குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்ட
மாமனிதர்களான ஜோசப்பரராசசிங்கம் பா.உ, சந்திரநேரு மேனாள் பா.உ, ஊடகவியலார் தராகி சிவராம், நாட்டுப்பற்றாளர்களான் ஊடகவியலாளர் ஐ. நடேசன், மனித உரிமை செயல்பாட்டாளர் சந்திரா பெர்னான்டோ, அருட்தந்தையர்களான சுட்டுக்கொல்லப்பட்ட அமரிக்க துறவி அருட்தந்தை இயுனின் ஜே ஹபர், சவரிமுத்து செல்வராசா, மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா.
ஆகிய ஒன்பது பேருக்கும் அவர்களுடைய படம் விசேடமாக பார்வைக்காக வைத்து அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button