தமிழீழம்தமிழ்

ஊடக அச்சுறுத்தலுக்கு எதிராக யாழில் போராட்டத்தில் குதித்த ஊடகவியலாளர்கள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக முன்றலில் ஊடகவியலாளர்களால் போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார் .

அதனடிப்படையில் இன்று  யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் அவர் கலந்து கொள்ளவிருந்த நிலையிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி, ஊடக பிரதிஅமைச்சரின் நிகழ்வினை யாழ். ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்தனர்

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button