உலகம்

ஈரானின் கொசுப்படையை போன்று ரஷ்யாவிலும் உருவாக்க வேண்டும்! பாராட்டிய ஜனாதிபதி புதின்

ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஈரானின் “கொசுப்படை” (Mosquito Fleet) போர்த் தந்திரத்தை பாராட்டியதுடன், ரஷ்ய கடற்படையிலும் அதுபோன்ற திறன் வாய்ந்த பிரிவை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலையில், ஈரான் சிறிய அளவிலான அதிவேக தாக்குதல் படகுகளை பயன்படுத்தி கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக ரஷ்ய அரச ஊடகமான ஸ்புட்னிக் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களை சுட்டிக்காட்டிய புதின், ஈரானின் “கொசுப்படை” போர்க்களத்தில் திறமையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அந்தப் படகுகள் அளவில் சிறியதாக இருந்தாலும், நவீன ஆயுதங்கள் மற்றும் அதிவேக செயற்பாட்டு திறன் காரணமாக கடற்போரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்கால கடற்படை நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாக, இதுபோன்ற திறன் வாய்ந்த, விரைவாக செயல்படும் சிறிய தாக்குதல் படகுகள் அடங்கிய பிரிவை ரஷ்ய கடற்படையிலும் உருவாக்க வேண்டும் என கடற்படை அதிகாரிகளிடம் புதின் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button