இலங்கைதமிழீழம்தமிழ்

முழங்கால் பகுதியில் ஆணியுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு; செம்மணி புதைகுழியில் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி  3ஆம் கட்ட அகழாய்வின் 41 ஆம் நாள் அகழ்வு இன்று  நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று மேலும் புதிதாக 7 மனித எலும்புக்கூடுகள்  அடையாளம் காணப்பட்டன.
இதனையடுத்து, மூன்று கட்ட அகழாய்வுகளிலும் இதுவரை 478 மனித எலும்புக்கூடுகள்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 464 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழாய்வில் மேலும் 3 மனித எலும்புக் குவியல்கள்(Human Accumulations) அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு 35, 36 மற்றும் 37 என்ற இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், இன்று 2 பிற சான்றுப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் ஒன்றான இரும்பு ஆணி, ஒரு மனித எலும்புக்கூட்டின் முழங்கால் பகுதியில் காணப்பட்டதாக சட்டத்தரணி நிரஞ்சன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேலும் இன்றையதினம் இனங்காணப்பட்ட சிறு வயதுடையவரின் எலும்புக்கூடு ஒன்று  மழை அங்கியை ஒத்த அங்கியுடனும் (Raincoat) காலில் காலுறையுடனும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை சுற்று மரப்பெட்டியும் காணப்பட்டது எனவே குறித்த எலும்புக்கூடு முறையாக புதைக்கப்பட்டதான என சந்தேகமிருப்பதாகவும் பரிசோதனைகளின் பின்பே இதுதொடர்பாக தெரியவரும் என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button