இலங்கை

சுவிசின் சுக் (Zug) மாநிலத்தில் பார்க்கிங் கட்டண இயந்திரங்களில் போலி QR-Code மோசடி!

 

சுவிற்சர்லாந்தில் உள்ள சுக் (Zug) மாநிலத்தில், வாகனங்களை நிறுத்தும் இடங்களில் (Parking zones) அமைக்கப்பட்டுள்ள கட்டண செலுத்தும் இயந்திரங்களில் (Parkuhren) அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் போலியான QR-குறியீடுகளை (QR-Codes) ஒட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் இது குறித்து காவல்துறைக்கு முதல் புகார் வந்தது. அதைத் தொடர்ந்து, ரோந்துப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் நடத்திய ஆய்வில், நகரின் பல இடங்களில் இவ்வாறு மோசடியாக ஒட்டப்பட்டிருந்த பல போலியான ஸ்டிக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

⚠️ காவல்துறை எச்சரிக்கை:
பொதுமக்கள் தங்கள் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும்போது, இயந்திரங்களில் உள்ள QR-குறியீடுகள் உண்மையானவைதானா என்பதை நன்கு சரிபார்த்து விழிப்புடன் செயல்படுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

#மோசடிஎச்சரிக்கை #விழிப்புணர்வு #விடுதலைFM #சுவிஸ்தமிழர்தகவர்மையம்
#Zug #Switzerland #SwissNews
#QRCodescam #CyberSecurity
#ParkingScam #FraudAlert #ViduthalaiFM #SwissTamilInfo #SwissTamil

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button