
சட்டவிரோத மீன்பிடி, இழுவைமடித் தொழில்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டமூலங்கள் இறுதி அனுமதிக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன்படி ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படாதவாறு கடல் அட்டை பண்ணைகள் முறைப்படுத்தப்படும். காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கான பொருளாதார நிவாரணத் திட்டங்கள் தயாராகி வருகின்றன.
இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலில் காணாமல் போவோரை மீட்க ஜப்பான் நிதியுதவியுடன் 2 அதிநவீன மீட்புப் படகுகள் இந்த வருடத்திற்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
மீன்பிடித்துறையை நவீனமயமாக்க நோர்வே, ஜப்பான் நாடுகளின் ஒத்துழைப்பு பெறப்படும்.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு 138 புதிய படகுகள், நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதுடன், 100-க்கும் மேற்பட்ட படகுகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
சிறிய படகுகளுக்கு 25 லீற்றரும், பெரிய படகுகளுக்கு 150,000 லீற்றரும் மண்ணெண்ணெய் மானியமாக வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்தகால அரசாங்கங்களை போலன்றி, தற்போதைய அரசு கடற்றொழிலாளர் வாழ்வாதாரத்திற்கு முதலிடம் வழங்கி நிலையான தீர்வை வழங்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.





