
கட்டாரில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 12 இந்தியர்கள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக, கட்டாரின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையம் முன்னதாகக் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.
அத்துடன்,போர் முடிவடைந்து பேச்சுவார்த்தை தொடங்கியதைத் தொடர்ந்து, மூடிக்கிடந்த இந்த ஆலையை மீண்டும் இயக்க கட்டார் அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், இதற்காக ஊழியர்களும், பொறியாளர்களும் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும், தொழிலாளர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகின்றன.





