
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, கட்டார் அரச குடும்பம் சார்பில் சொகுசு விமானம் ஒன்று பரிசளிக்கப்பட்டுள்ளது.
எயார் போர்ஸ் ஒன் என்ற இந்த
புதுப்பிக்கப்பட்ட போயிங் 747-8 விமா னத்தின் ஆரம்ப நிகழ்ச்சி மேரிலேண்டில் உள்ள கூட்டு இராணுவ தளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதில் கலந்து கொண்டு விமான சேவை யை ஆரம்பித்து வைத்த ட்ரம்ப் வெறும் 10 மாதங்களில் புதுப்பிக்கப்பட்ட இந்த விமானத்தை பறக்கும் வெள்ளை மாளிகை” மற்றும் “பறக்கும் அரண்மனை” என்று பாராட்டியுள்ளார்.
அத்துடன்,இதில் படுக்கையறை, பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்ட குளியலறை போன்ற பல சொகுசு வசதிகள் உள்ளன.
மேலும்,எதிர்க்கட்சிகள் இதனை ‘இலஞ்சம்’ என்று விமர்சித்தாலும், அமெரிக்க பாதுகாப்புத் அமைச்சு இது விதிமீறல் அல்ல என்றும், அமெரிக்க விமானப் படைக்கான பரிசு என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப், சவூதி அரேபியா, யு.ஏ.இ, கட்டார் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,அணு ஆயுத தாக்குதலை எதிர்கொள்ளும் திறன், ஏவுகணை தடுப்பு மற்றும் வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி போன்ற எயார் போர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையான பாதுகாப்பு அம்சங்களை இதிலும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விமானமானது,ஜோர்ஜ் புஷ் காலம் முதல் 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய விமானத்திற்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





