உலகம்

நாளை முதல் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும் – ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

 

 

 

கடந்த மூன்று மாதங்களாக மூடிக்கிடந்த இந்த கடல்வழிப் பாதையில், போர் ஏற்படுவதற்கு முந்தைய நிலை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளநிலையில், ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

 

 

 

இதன் மூலம் ஈரான் தனது மசகு எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி விற்கலாம். இந்தியாவிற்கு, ஹோர்முஸ் நீரிணை திறப்பு மிகப்பெரிய பொருளாதார நிம்மதியை அளிக்கும் என மத்திய பெட்ரோலிய அமைச்சு வரவேற்றுள்ளது.

 

 

 

அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் மீண்டும் தொடங்கியதால் மசகு எண்ணெய் விலை சரியத்தொடங்கியுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button