இலங்கை

உண்மைகளை சலே வெளியிட வேண்டும் – நளிந்த

பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

சில சந்தர்ப்பங்களில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை அரசியல் கொலையென்று விளக்கம் கொடுத்து, சலேவை அரசியல் கைதி என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம். இதற்காக குழப்பமடைய வேண்டியதில்லை. குழப்பமடைவதாலேயே சிக்கல் ஏற்படுகிறது. விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாது.

 

 

 

சுரேஷ் சலே யாரையும் காட்டிக்கொடுக்காமல் வாயை திறக்காமல் இருப்பதாக சரத் வீரசேகர கூறியுள்ளார். அவ்வாறான கருத்துகளினால் இதுதொடர்பிலுள்ள தொடர்புகள் குறித்து மக்களுக்கு சில புரிதல்கள் ஏற்படுகின்றன. எப்படியிருந்தாலும், புலனாய்வு அதிகாரி என்ற அடிப்படையிலும் இராணுவ அதிகாரி என்ற அடிப்படையிலும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தான் அறிந்த விடயங்களை வெளியிடுவதே சுரேஷ் சலே செய்ய வேண்டிய ஒரே விடயமாகும்.

 

 

 

குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாறாக, குற்றவியல் விசாரணை அதிகாரியை நீக்குவதாகக்கோரி போராட்டம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தான் அறிந்த அல்லது கைபேசி, கணினியிலுள்ள தகவல்களை பெற்றுக்கொடுப்பதே அவசியமாகும்.

 

 

 

சரத் வீரசேகர கூறுவதுபோன்று எதிர்காலத்தில் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் சலேவுக்கு தெரியுமாக இருந்தால் அதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தனக்கு தெரியாவிட்டால் அறிந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொடுப்பதே புலனாய்வு அதிகாரியின் கடமையாகும்.

 

 

 

சலே பிரத்தியேகமாக புலனாய்வுப் பிரிவை முன்னெடுத்து சென்றாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் அரச புலனாய்வு அதிகாரியாகவே கடமையாற்றினார். அப்படியென்றால், அவர் அரசுக்கே தகவல்களை வழங்க வேண்டும்’’ என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button