உலகம்

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது” : பீட் ஹெக்செத் பேச்சால் சர்ச்சை

ஹோர்முஸ் நீரிணை பகுதியைத் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

 

 

 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பாவில் உள்ள அமெரிக்க மத்திய இராணுவத் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனை தெரிவித்தார். 

 

 

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

 

 

 

மேலும் அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து வாரக் கணக்கில் இந்த பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை வெற்றிகரமாகக் கையாண்டு வருவதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள ஈரான் மறுத்தாலும் இதுதான் தற்போதைய உண்மையான களநிலவரம் என்றும் அவர் திட்டவட்டமாகத் கூறினார்.

 

 

 

அத்துடன் இந்த வழித்தடத்தில் சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய, அமெரிக்கா ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ என்ற இரகசியப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் இதுவரை 100 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான மசகு எண்ணெய் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

 

 

 

ஈரானின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் தடையற்ற போக்குவரத்தை அமெரிக்கா தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளது.

 

 

 

அத்துடன் சுமார் 140 வணிகக் கப்பல்கள் இதுவரை அமெரிக்கப் படைகளால் வெற்றிகரமாக முடக்கப்பட்டதுடன், சர்வதேச தடைகளை மீறி ஈரானில் இருந்து வெளியேற முயன்ற ஒரு பெரிய மசகு எண்ணெய் பீப்பாய் கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 

 

 

“ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியது நூறு விகதிம் உண்மை என்பதை தற்போதைய கள நிலவரம் நிரூபிப்பதாகப் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.

 

 

 

உலகளாவிய மசகு எண்ணெயில் பெரும்பகுதி இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுவதால், அங்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் இந்த இராணுவப் பதற்றங்கள் சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலையை உயர்த்தி, இந்தியாவின் சில்லறை எரிபொருள் விலையையும், சாமானியர்களின் மாதாந்த வரவு செலவுகளையும் நேரடியாகப் பாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button