இலங்கைஉலகம்

மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட ஏழு பேர் குவைத் பாதுகாப்புப் படையினரால் கைது

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட ஏழு பேரை குவைத் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

 

 

 

குவைத் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போதே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

 

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, இந்த குழுவில் மூன்று இலங்கையர்கள், இரண்டு குவைத் குடிமக்கள், ஒரு இந்திய பிரஜை மற்றும் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உள்ளடங்குகின்றனர்.

 

 

 

இந்த சோதனையின் போது ஹசீஸ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருட்களை எடைபோடும் மற்றும் பொதி செய்யும் (பேக்கேஜிங்) உபகரணங்களும் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

 

 

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக குவைத்தின் குற்றவியல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button